
எனது இன்றைய கருப்பொருள், ‘மிதிவண்டி’! இன்றைக்கு, மனிதவாழ்வில் மிதிவண்டி என்பது மிக மிகச் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. ஆனால், ஒரு ஐம்பதாண்டுகளுக்கு முன், அதன் மதிப்பு இன்றைய நவீன மகிழ்வுந்து வாகனங்களுக்கு இணையானது என்று சொன்னால், இளம் தலைமுறையினர் பலரும் நம்ப மாட்டார்கள். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பல்வேறு திருமணங்களையும் நிச்சயித்த இடத்தில் இந்த மிதிவண்டி இருந்தது. எனது பெரிய அத்தையின் திருமணத்திற்கு, எனது பாட்டனார் அவரது மாப்பிள்ளைக்கு அளித்த சீதனம் இந்த மிதிவண்டிதான். ஆனால், சில வருடங்களிலேயே, அதே போன்றதொரு மிதிவண்டி எனது தாய்-தந்தையின் திருமணத்தின் போது, அவர்கட்கும் சீதனமாகக் கிடைத்தது என்பதுவும் குறிப்பிடத்தக்கதே. இத்தனைக்கும், எனது தாத்தாவிற்கு மிதிவண்டி ஓட்டத் தெரியாது.
தொடர்ந்து படிக்க: இங்கே சுட்டவும்
பின்னூட்டமொன்றை இடுக