இயன்மொழி
பழந்தமிழரின் இலக்கியத்தையும், கண்டங்கள் தாண்டி தமிழன் ஆட்சி புரிந்த வரலாற்றையும் பகிர்ந்து கொள்ளும் பக்கம் இது. இயல், இசை, நாடகம் என முத்தமிழுடன் அறிவியல் தமிழையும் முத்தாய்ப்பாய்க் கொடுக்கும் முன்னெடுப்பு இது. அழிவின் விளிம்பில் இருக்கும் பழம்பெரும் தமிழ்க் கலைகளையும், வறுமையின் கோரப்பிடியில் சிக்குண்ட போதினிலும், இந்தக் கலைகளை இன்னும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களையும் ஒருசேர இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் நாம் உறுதி பூண்டிருக்கின்றோம். மேலும் ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் மற்றும் தென்னமெரிக்காவில் இருக்கும் அவ்வளவாக அறியப்படாத வரலாற்று மற்றும் கலாச்சார தகவல்களை ஆவணப்படுத்தும் தளமாகவும் இருக்கும். எனவே, இணைந்து வாருங்கள், முனைந்து செல்வோம்!More info
