இலக்கியம், அறிவியல், பண்டைய வரலாறு, தொல்லியல் என்று உலகின் தமிழர்கள் மற்றும் பல்வேறு தொல்குடிகளைப் பற்றிய தகவல்கள் மற்றும் கட்டுரைகள்

நூல்கள்

ஆறுகால் அதிசயங்கள்

இந்த உலகில் உள்ள அத்தனை உயிரினங்களையும் (மனிதன் உட்பட) கணக்கில் எடுத்துக் கொண்டால், அவற்றில் நான்கில் மூன்று பங்கிற்கும் மேல் இருப்பவை பூச்சி இனங்களே. அவற்றைப் பற்றி நாம் அறிந்திராத தகவல்கள் கணக்கிலடங்கா. மின்மினிப் பூச்சிகள் எப்படி ஒளியை உருவாக்குகின்றன? கரையான் புற்றில் ஏன் பாம்பு குடியேறுகின்றது? பட்டுப் புழுக்கள் எப்படி பட்டு நூலினை உருவாக்குகின்றன? எறும்புகள் ஏன் வரிசையில் செல்கின்றன? இப்படியான பல்வேறு வகையான வினாக்களுக்கும் விடையளிக்கும் நூல் இது.